ஜூலையில் ரூ.1,48,995 கோடி ஜி.எஸ்.டி. வசூல் - கடந்த ஆண்டை விட 28% கூடுதல்

ஜூலையில் ரூ.1,48,995 கோடி ஜி.எஸ்.டி. வசூல் - கடந்த ஆண்டை விட 28% கூடுதல்
ஜூலையில் ரூ.1,48,995 கோடி ஜி.எஸ்.டி. வசூல் - கடந்த ஆண்டை விட 28% கூடுதல்

கடந்த 5 மாதங்களில் மாதாந்திர ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.4 லட்சம் கோடிக்கும் அதிகமாக இருப்பது ஒவ்வொரு மாதமும் சீரான அதிகரிப்பை காட்டுகிறது.

2022 ஜூலை மாதத்தில்  மொத்தம் ரூ.1,48,995 கோடி ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளது. இதில் சிஜிஎஸ்டி ரூ. 25,751 கோடி, எஸ் ஜிஎஸ்டி ரூ. 32,807 கோடி, ஐஜிஎஸ்டி ரூ. 79,518 கோடி (சரக்குகளின் இறக்குமதி மீதான ரூ. 41,420 கோடி உள்பட). செஸ்வரி ரூ. 10,920 கோடி (சரக்குகளின் இறக்குமதி மீதான ரூ. 995 கோடி உள்பட). ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டபின் 2-வது முறையாக இவ்வளவு அதிகபட்ச வருவாய் கிடைத்துள்ளது.  

தமிழ்நாட்டில் சென்ற ஆண்டு ஜூலை மாதத்தில் ரூ.6,302 கோடி ஜிஎஸ்டி வசூலான நிலையில், இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 34 சதவீதம் அதிகரித்து, ரூ.8,449 கோடி வசூலாகியுள்ளது. புதுச்சேரியில் சென்ற ஆண்டு ஜூலை மாதத்தில் ரூ.129 கோடி ஜிஎஸ்டி வசூலான நிலையில், இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 54 சதவீதம் அதிகரித்து, ரூ.198 கோடி வசூலாகியுள்ளது. ஐஜிஎஸ்டியில் இருந்து சிஜிஎஸ்டிக்கு ரூ. 32,365 கோடியும், எஸ்ஜிஎஸ்டிக்கு ரூ. 26,774 கோடியும் அரசு வழங்கியுள்ளது. 2022 ஜூலை மாதத்தில் மத்திய அரசு மற்றும் மாநிலங்களுக்கான மொத்த வருவாய் வழக்கமான பைசலுக்கு பின் சிஜிஎஸ்டிக்கு ரூ.58,116 கோடியாகவும் எஸ்ஜிஎஸ்டிக்கு ரூ. 59,581 கோடியாகவும் உள்ளது.

கடந்த ஆண்டு இதே மாதத்தில் ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1,16,393 கோடியாக இருந்த நிலையில் 2022 ஜூலை மாத வருவாய்  அதைவிட 28 சதவீதம் அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தை விட சென்ற மாதம் சரக்குகளின் இறக்குமதி மூலமான வருவாய் 48 சதவீதமும், உள்நாட்டு பரிவர்த்தனைகள் மூலமான வருவாய் (சேவைகளின் இறக்குமதி உள்பட) 22 சதவீதமும் அதிகமாக உள்ளது. கடந்த 5 மாதங்களில் மாதாந்திர ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.4 லட்சம் கோடிக்கும் அதிகமாக இருப்பது ஒவ்வொரு மாதமும் சீரான அதிகரிப்பை காட்டுகிறது.

இதையும் படிக்க: கடைசி நாளில் 70 லட்சம் பேர் வருமான வரி தாக்கல் - இனி தாக்கல் செய்தால் அபராதம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com