\
காசியாபாத்: 25வது மாடியிலிருந்து விழுந்து 14வயது இரட்டையர்கள் உயிரிழப்பு

காசியாபாத்: 25வது மாடியிலிருந்து விழுந்து 14வயது இரட்டையர்கள் உயிரிழப்பு

காசியாபாத்: 25வது மாடியிலிருந்து விழுந்து 14வயது இரட்டையர்கள் உயிரிழப்பு
Published on

காசியாபாத்தில் 14 வயது இரட்டையர்கள் 25வது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலம் காசியாபாத்தின் சித்தார்த் விஹாரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவரும் ஒரு தம்பதியருக்கு 14 வயதில் சத்யநாராயணன் மற்றும் சூர்யநாராயணன் என்ற இரட்டை சிறுவர்களும், ஒரு மகளும் இருந்திருக்கின்றனர். குழந்தைகளின் தந்தை வேலை காரணமாக மும்பைக்குச் சென்றிருக்கிறார். இந்நிலையில் நேற்று இரவு இரண்டு சிறுவர்களும், தாயார் மற்றும் சகோதரியுடன் இருந்திருக்கின்றனர். இரவு 1 மணியளவில் இருவரும் மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளனர்.

25வது மாடியிலிருந்து சிறுவர்கள் எப்படி கீழே விழுந்தனர் என்பது குறித்து போலீசார் தற்போது விசாரணை நடத்திவருகின்றனர். உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியிருப்பதாகவும், முடிவுகள் வந்தபிறகே இது கொலையா, தற்கொலையா என்பது குறித்து தெரியவரும் என்றும் போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com