விபரீதமான ஆசை.. புத்தாண்டை கொண்டாட சென்ற சிறுமி பேருந்து ஓட்டுநருடன் சடலமாக மீட்பு! நடந்தது என்ன?

புத்தாண்டை கொண்டாட செல்வதாக கூறிவிட்டு வெளியேறிய 14 வயது சிறுமி.. பேருந்து ஓட்டுநருடன் ரயிலில் அடிபட்டு சாவு.. தற்கொலையா அல்லது விபத்தா? என்ன நடந்தது? முழு விவரத்தை பார்க்கலாம்.
died bus driver and child
died bus driver and childpt

கர்நாடக மாநிலம் சிக்மகளூர் மாவட்டம் அஜ்ஜம்பூர் அருகே உள்ள வங்கினகட்டே பகுதியைச் சேர்ந்தவர் 14 வயது பள்ளி மாணவி. இவர் கிரியாபூர் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் புத்தாண்டை கொண்டாட செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஆனால், இரவு முழுவதும் சிறுமி வீடு திருமபாததால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை.

இதற்கிடையே, அன்றைய தினமே நள்ளிரவு நேரத்தில் ரயிலில் அடிபட்டு 2 பேர் உயிரிழந்ததாக தகவல் கிடைத்த நிலையில், அங்கு சென்று பார்த்தபோது அவர்கள் காணாமல் போன 14 சிறுமி மற்றும் பள்ளி பேருந்து ஓட்டுநர் சந்தோஷ் என தெரிய வந்துள்ளது. இதையடுத்து இறந்தவர்களின் சடலங்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சிக்கமகளூரு மல்லேகவுடா மாவட்ட மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளன.

died bus driver and child
இந்த யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு இனி 1.1% பரிமாற்ற கட்டணம்! - ஜன.1 முதல் புதிய விதிமுறைகள் அமல்!

இது தொடர்பாக அஜ்ஜம்பூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சிறுமியும், 38 வயதான பள்ளி பேருந்து ஓட்டுநர் சந்தோஷும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. சந்தோஷ் குறித்து சிறுமியின் பெற்றோர் பலமுறை பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது.

இதையடுத்து சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளி தலைமையாசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈட்டுப்பட்டனர். புத்தாண்டை கொண்டாட செல்வதாக கூறிவிட்டு சென்ற சிறுமி, பேருந்து ஓட்டுநர் சந்தோஷுடன் ரயிலில் அடிபட்டு இறந்த நிலையில், விபத்தா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

died bus driver and child
"தமிழ்நாட்டுக்கு வரும் போதெல்லாம் புதிய சக்தியை நிரப்பிச் செல்கிறேன்" - திருச்சியில் பிரதமர் பேச்சு!

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com