14ஆயிரம் மதுபாட்டில்களை ரோலரை விட்டு சில்லுசில்லாக்கிய ஆந்திர போலீசார்!

14ஆயிரம் மதுபாட்டில்களை ரோலரை விட்டு சில்லுசில்லாக்கிய ஆந்திர போலீசார்!

14ஆயிரம் மதுபாட்டில்களை ரோலரை விட்டு சில்லுசில்லாக்கிய ஆந்திர போலீசார்!
Published on

ஆந்திர மாநிலத்தில் ரூ.72 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை ரோடு ரோலரை வைத்து போலீசார் அழித்தனர்.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கிருஷ்ணா மாவட்ட போலீசார் 14,189 மதுபாட்டிகளை அடுக்கி அதன் மீது ரோடு ரோலரை விட்டு சில்லுசில்லாக்கினர். இதன் மதிப்பு 72 லட்சம் ஆகும்.

மதுபாட்டில்களை வரிசையாக அடுக்கிய போலீசார் அதன் மீது ரோலரை ஓட விட்டனர். 14ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதுபாட்டிகள் உடைவதை பார்க்க பலர் அங்கு கூடியிருந்தனர். மதுபாட்டில்களால் தீவிபத்து ஏற்படலாம் என முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருந்தன. தீ அணைப்பான்கள் தயார் நிலையில் இருந்தன

ஊரடங்கு நேரத்தில் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டது, வாகனங்களில் பறிமுதல் செய்யப்பட்டது என 10 காவல்நிலையங்கள் மூலம் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் இவை. 312 வெவ்வேறான வழக்குகளின் படி 14189 மதுபாட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக கிருஷ்ணா மாவட்ட எஸ்பி ரவீந்திரநாத் பாபு தெரிவித்துள்ளார். இந்த மதுபாட்டில்கள் அழிப்பின் போது மேலும் சில போலீஸ் அதிகாரிகளும் உடன் இருந்தனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com