மகாராஷ்டிரா: பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்ட்டரில் 13 மாவோயிஸ்டுகள் பலி

மகாராஷ்டிரா: பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்ட்டரில் 13 மாவோயிஸ்டுகள் பலி
மகாராஷ்டிரா: பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்ட்டரில் 13 மாவோயிஸ்டுகள் பலி

மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் காவல்துறையினருடன் ஏற்பட்ட மோதலில் 13 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.

கோட்மிக்கு அருகிலுள்ள வனப்பகுதியில் அதிகாலை 5.30 மணியளவில் இந்த மோதல் தொடங்கியது. அங்கு மாவோயிஸ்டுகள் ஒரு கூட்டத்திற்காக கூடியிருந்தனர் என்று கட்சிரோலி டி..ஜி சந்தீப் பாட்டீல் தெரிவித்தார்.

" எங்களுக்கு வந்த தகவல்களின் அடிப்படையில் சி -60 கமாண்டோக்களை உள்ளடக்கிய போலீஸ் குழு காட்டில் தேடல் நடவடிக்கையைத் தொடங்கியது.மாவோயிஸ்டுகள் போலீஸைக் கண்டுபிடித்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த மோதல் ஒரு மணி நேரம் நீடித்தது, அதன் பின்னர் மீதமுள்ள மாவோயிஸ்டுகள் சுற்றியுள்ள காட்டிற்குள் தப்பி ஓடினர்என்று கட்சிரோலி போலீஸ் சூப்பிரண்டு அங்கித் கோயல் தெரிவித்தார். உயிரிழந்த மாவோயிஸ்டுகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. தப்பியோடியவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com