மின் கட்டணம் ரூ.13 லட்சம்: கூலி தொழிலாளி ஷாக்

மின் கட்டணம் ரூ.13 லட்சம்: கூலி தொழிலாளி ஷாக்

மின் கட்டணம் ரூ.13 லட்சம்: கூலி தொழிலாளி ஷாக்
Published on

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தால், கூலி தொழிலாளிக்கு 13 லட்சம் ரூபாய் மின் கட்டணம் வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள சமஸ்திபுர் மாவட்டத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி மனோஜ்குமார். இவரது வீட்டில் எல்.இ.டி பல்புகள், டி.வி. மற்றும் ஒரு மின்விசிறி மட்டுமே உள்ளது. இந்நிலையில், இவருக்கு 2,992 ரூபாய்க்கு பதில் 13 லட்சம் ரூபாய் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என பில் வந்துள்ளது. இதையடுத்து மனோஜ் குமார் அளித்த புகாரின்பேரில், சோதனை செய்த மின் அதிகாரிகள், மீட்டரில் ஏற்பட்ட பழுதின் காரணமாக தவறு நடைபெற்றுள்ளது என தெரிவித்தனர். 

முன்னதாக ஜனவரி மாதத்திலும், 1335 ரூபாய்க்கு பதிலாக 1லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் வந்தது என்றும், இந்த பிரச்சனை தீர்த்து வைக்கப்பட்ட பின்னர் மீண்டும் இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளதாக மனோஜ்குமார் தெரிவித்தார். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com