\
ராணுவ ஹெலிகாப்டர் விபத்து - 14 பேரில் 13 பேர் உயிரிழந்ததாக ஏ.என்.ஐ தகவல்

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து - 14 பேரில் 13 பேர் உயிரிழந்ததாக ஏ.என்.ஐ தகவல்

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து - 14 பேரில் 13 பேர் உயிரிழந்ததாக ஏ.என்.ஐ தகவல்
Published on

ஹெலிகாப்டரில் பயணம் செய்த 14 பேரில் 13 பேர் உயிரிழந்ததாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதையில் வானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து குன்னூர் வெலிங்க்டன் பயிற்சி மையத்திற்கு சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் பயணித்தது தெரியவந்துள்ளது. முதலில் 4 பேர் எரிந்து சடலமாக மீட்கப்பட்ட நிலையில் பின்னர் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு அனுப்பிவைக்கப்பட்டவர்களில் ஒருவர் வழியிலேயே உயிரிழந்தார். அவரைத்தொடர்ந்து மொத்தம் 9 பேர் உயிரிழந்ததாக உறுதிசெய்யப்பட்டது. தற்போது 14 பேர் மீட்கப்பட்ட நிலையில் 13 பேர் உயிரிழந்ததாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டிருக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com