முதல் ஐந்து இடம் பிடித்த மாவட்டங்கள் முதல் தேர்ச்சி விகிதம் வரை! முழு தகவல்!
தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3-ம் தேதி முதல் தொடங்கி மார்ச் 25-ம் தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில், இதற்கான முடிவுகள் இன்று (மே 8) காலை 9 மணிக்கு வெளியானது.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்களில் முடிவுகளை வெளியிட்டார் .மாணவர்கள் முடிவுகளை https://tnresults.nic.in/, https://results.digilocker.gov.in/ மற்றும் https://www.dge.tn.gov.in/ என்ற இணைய முகவரிகள் மூலம் ஆன்லைனில் அறிந்துகொள்ளலாம்.
இந்தவகையில், தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 95.03% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 7,53,142 மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பள்ளிகள் மேலாண்மை வாரியான தேர்ச்சி சதவிகிதம்:
அரசுப் பள்ளிகளில் 91.94%,
அரசு உதவி பெறும் பள்ளிகளில் 95.71%,
தனியார் பள்ளிகளில் 98.88% மாணாக்கர்கள்
பள்ளிகள் வகைப்பாடு வாரியான தேர்ச்சி சதவிகிதம்:
இருபாலர் பள்ளிகள் - 95.30%
பெண்கள் பள்ளிகள் - 96.50%
ஆண்கள் பள்ளிகள் - 90.14%
முதல் ஐந்து இடம் பிடித்த மாவட்டங்கள்!
அரியலூர் முதலிடம் : 98.2%
ஈரோடு இரண்டாம் இடம் : 97.98%
திருப்பூர் முன்றாம் இடம்: 97.53%
கோவை நான்கு இடம் : 97.48%
கன்னியாகுமரி ஐந்தாம் இடம் : 97.01%
பாடவாரியாக தேர்ச்சி விகிதம்:
தமிழ் - 99.15%
கணிதம் - 99.16%
இயற்பியல் - 99.22%
வேதியியல் - 98.99%
உயிரியல் - 99.15%
கணினி அறிவியல் - 99.73%
பாடவாரியாக சதம் அடித்தவர்கள்:
தமிழ் - 135
கணிதம் - 3022
இயற்பியல் - 1125
வேதியியல் - 3181
உயிரியல் - 827
கணினி அறிவியல் - 9536