இந்தியா
ஆப்கானில் இருந்து விமானம் மூலம் தாயகம் திரும்பிய 129 இந்தியர்கள்
ஆப்கானில் இருந்து விமானம் மூலம் தாயகம் திரும்பிய 129 இந்தியர்கள்
ஆப்கானிஸ்தானில் வசித்துவந்த 129 இந்தியர்கள் முதல்கட்டமாக விமானம் மூலம் தாயகம் திரும்பியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், ஆப்கனில் வசித்த 129 இந்தியர்கள் ஏர் இந்தியா விமானம் மூலமாக டெல்லி திரும்பினர். ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இனிவரும் நாள்களில் ஒருவேளை ஆப்கனில் நிலைமை மோசமடையும் பட்சத்தின் ஆப்கனில் வசிக்கும் மற்ற இந்தியர்களையும் இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு நிலைமையை கவனித்து வருகிறது.
ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வருவதற்காக, ஏர் இந்தியா நிறுவனம் சிறப்பு விமானத்தை இயக்கியது. இதன்படி ஏர் இந்தியாவின் சிறப்பு விமானம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் சென்றது. அங்கிருந்து 129 பேர்களுடன் புறப்பட்ட அந்த விமானம் டெல்லி வந்து சேர்ந்தது.