இந்தியா
மேற்கு வங்கத்தில் 120 மீட்டர் நீள தேசியக் கொடி..!
மேற்கு வங்கத்தில் 120 மீட்டர் நீள தேசியக் கொடி..!
மேற்குவங்கம் சிலிகுரியில் 120 மீட்டர் நீளம் கொண்ட இந்திய தேசியக் கொடி தயாரிக்கப்பட்டு முக்கிய வீதிகளில் கொண்டு செல்லப்பட்டது.
நேதாஜி சுபாஷ் சந்திர போசின் 120-வது பிறந்தநாள் தினத்தை கொண்டாடும் விதமாக 120 மீட்டர் நீளம் கொண்ட இந்திய தேசியக் கொடி மேற்குவங்க மாநிலம் சிலிகுரியில் தயாரிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அமைப்பு சார்பில் தயாரிக்கப்பட்ட இந்த தேசியக் கொடி சிலிகுரியில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக கொண்டு செல்லப்பட்டது. இந்த நிகழ்வில் மாணவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்று தேசியக் கோடியை சுமந்து சென்றனர்.
நேதாஜி சுபாஷ் சந்திர போசின் 120-வது பிறந்த தினத்தை கொண்டாடும் விதமாககவும் அவருக்கு மரியாதை செய்யும் விதமாகவும் நீளமான இந்திய தேசியக் கொடி தயாரிக்கப்பட்டதாக மாணவர்கள் தெரிவித்தனர்.