\
மனநலம் பாதிக்கபட்ட சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

மனநலம் பாதிக்கபட்ட சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

மனநலம் பாதிக்கபட்ட சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை
Published on

மேற்கு டெல்லியில் 12வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

மேற்கு டெல்லியில் 12வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கும்பல் அதனை படம் பிடித்து சிறுமியின் குடும்பத்தினருக்கு வாட்ஸ் ஆப்பில் அனுப்பியுள்ளது.  அப்பகுதியை சேர்ந்த பண்டி என்பவர் மனநலம் பாதிக்கபட்ட அந்தச் சிறுமியை தூக்கி சென்று தனது நண்பர்களுடன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை வீடியோவாகவும் பதிவுசெய்துள்ளார். இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச்சம்பவத்தில் பண்டி என்ற நபர் மூளையாக செயல்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பண்டி மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரது நண்பர்கள் இருவர் மீது குற்றச்செயலில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பண்டி அப்பகுதியில் செல்வாக்கு மிக்க நபர் என்பதால் சிறுமிக்கு பெற்றோருக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகின்றனர். பண்டி மீது கொடுத்த வழக்கை திரும்பபெற வேண்டும் என்றும் சிறுமியின் குடும்பத்தினர் அப்பகுதியை விட்டு வெளியேற வேண்டும் என சிலர் மிரட்டுவதாக தெரிகிறது. 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com