சிறுவயதிலேயே தன்னார்வம்.. சாலை குழிகளை சரிசெய்யும் 12 வயது சிறுவன்!

சிறுவயதிலேயே தன்னார்வம்.. சாலை குழிகளை சரிசெய்யும் 12 வயது சிறுவன்!

சிறுவயதிலேயே தன்னார்வம்.. சாலை குழிகளை சரிசெய்யும் 12 வயது சிறுவன்!
Published on

சாலையில் உள்ள குழிகளால் ஏற்படும் விபத்துகளை தடுப்பதற்காக  அந்த குழியை சரிசெய்யும் முயற்சியில் சிறுவன் ஒருவர் ஈடுபட்டுள்ளார்.

ஹைதரபாத்தை சேர்ந்த 12 வயது சிறுவர் ரவி தேஜா. இவர் ஹப்சிகுடா பிரதான சாலையில் உள்ள குழிகளை தன்னால் முயன்ற அளவு சரிசெய்யம் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதுகுறித்து சிறுவன் கூறும்போது, "கடந்த சில தினங்களுக்கு முன் இந்த சாலையில் இருசக்கர வாகனத்தில் தம்பதியினர் பயணித்தனர். அப்போது சாலையில் உள்ள குழி காரணமாக பைக் கீழே சரிந்து விழுந்தது. குழிகளால் விபத்து ஏற்பட்டு இனிமேலும் இந்த சாலையில் யாரும் மரணம் அடைவதை காண நான் விரும்பவில்லை. இதனால் என்னால் முயன்றவரை சாலைக் குழிகளை நானே அடைத்து வருகிறேன்"  என்றார்.

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் சிறுவர் செய்யும் இந்த பெருஞ்செயல் அனைவராலும் பாராட்டப்பட வேண்டிய விஷயமே.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com