இந்தியா
வங்கியில் ரூ.3 லட்சம் திருட்டு: சிசிடிவி கேமராவில் சிக்கிய 12 வயது சிறுவன்
வங்கியில் ரூ.3 லட்சம் திருட்டு: சிசிடிவி கேமராவில் சிக்கிய 12 வயது சிறுவன்
உத்தரப்பிரதேசத்தில் 12 வயது சிறுவன், வங்கியில் பணத்தை திருடிச் சென்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தரப்பிரதேசத்தின் ராம்புர் நகரில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கிக் கிளையில் சுமார் 3 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. பகல் 12 மணி 20 நிமிடம் அளவில் நடைபெற்ற இந்த கொள்ளைச் சம்பவம் வங்கியில் இருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது. 12 வயது மதிக்கத்தக்க சிறுவன், பணத்துடன் பை ஒன்றை ரகசியமாக எடுத்துச் சென்ற காட்சி கிடைத்துள்ளது. இது தொடர்பாக வங்கி அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவனை வேறு ஏதேனும் கொள்ளை கும்பல், திருட்டு சம்பவத்திற்காக பயன்படுத்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிகிறது.