2022 குடியரசு தின அணிவகுப்பு ஊர்தி: எந்தெந்த மாநில வாகனங்களில் என்னென்ன ஸ்பெஷல்?

2022 குடியரசு தின அணிவகுப்பு ஊர்தி: எந்தெந்த மாநில வாகனங்களில் என்னென்ன ஸ்பெஷல்?
2022 குடியரசு தின அணிவகுப்பு ஊர்தி: எந்தெந்த மாநில வாகனங்களில் என்னென்ன ஸ்பெஷல்?

இந்தாண்டு டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின கொண்டாட்டத்தில் அருணாச்சல பிரதேசம், ஹரியானா, சட்டீஸ்கர், கோவா, குஜராத், ஜம்மு-காஷ்மீர், கர்நாடகா, மகாராஷ்டிரா, மேகாலயா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட் ஆகிய 12 மாநிலங்களில் அணிவகுப்பு வாகனங்கள் இடம்பெறுகிறது. இதில் எந்தெந்த மாநில அணிவகுப்பு வாகனங்களில் என்னென்ன விஷயங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்து சிறு தொகுப்பு இங்கே.

உத்தராகண்ட் மாநில அலங்கார ஊர்தியில் பத்ரிநாத் கோவில் வடிவம் முன்வைக்கப்பட்டுள்ளது. அதைப்போல உத்தரகண்ட் மாநிலத்தின் பள்ளத்தாக்குகளில் விளையும் அழகான மலர்களின் தோற்றமும் வைக்கப்பட்டுள்ளது. கர்நாடகா அலங்கார ஊர்தியில் சுதந்திர போராட்ட வீரர் கமலாதேவி சட்டோபாத்யாயா உருவமும் அனுமன் சிலையும் மற்றும் டெரகோட்டா சிலைகளும் வடிவமைக்கப்பட்டுள்ளது. குஜராத் அலங்கார ஊர்தியில் 1922ஆம் ஆண்டு குஜராத்தின் ஜாலியன்வாலாபாக் என்று அழைக்கப்படும் நிகழ்ச்சியை வடிவமைத்து மோதிலால் தெஜாவத் உருவமும் பொரிக்கப்பட்டுள்ளது.

ஹரியானா மாநிலத்தில் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா உள்ளிட்ட ஒலிம்பிக் வீரர் வீராங்கனைகளை குறித்த விவரங்கள் இடம்பெறுகிறது. உத்தரபிரதேச மாநில அலங்கார அணிவகுப்பு வாகனத்தில் காசி விசுவநாதர் கோவிலில் உருவம் பிரதானப் படுத்தப்பட்டுள்ளது. அருணாச்சல் பிரதேசம் மாநிலத்தைப் பொருத்தவரை 19ஆம நூற்றாண்டுகளில் ஆங்கிலேயர்களிடம் தங்களை நிலத்தை ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்து பழங்குடியின மக்கள் நடத்திய போராட்டங்கள் உருவ படுத்தப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தை பொறுத்தவரை மாட்டு சாணம் கிலோ இரண்டு ரூபாய்க்கு விற்கப்பட்டு இதன் மூலமாக இயற்கை முறையிலான உரம் உள்ளிட்டவை தயாரிக்கப்படும் திட்டம் மாநில அரசால் செயல்படுத்தப்படும் அது குறித்த விஷயம் உருவ படுத்தப்பட்டுள்ளது.

மேகாலயா மாநிலத்தில் பொறுத்தவரை அந்த மாநிலத்தின் 50வது ஆண்டு மாநில உரிமை பெற்றதை கொண்டாடும் வகையிலும் மூங்கில் உள்ளிட்ட மரப்பொருட்கள் ஆளான உருவங்கள் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல மகாராஷ்டிரா ஜம்மு-காஷ்மீர் பஞ்சாப் ஆகிய மாநிலங்களை பொறுத்தவரை அந்தந்த மாநிலங்களில் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் உருவங்கள் வைக்கப்படுகின்றது.

- நிரஞ்சன் குமார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com