கிழக்கு கடற்கரை சாலை உட்பட 12 தேசிய நெடுஞ்சாலைகளில், அவசர காலத்தில் விமானங்கள் தரையிறங்க அனுமதி
அளிக்கப்பட்டுள்ளது.
வெள்ளம், சூறாவளி, புயல் போன்ற அவசர காலங்களில், நாடு முழுவதும் 12 நெடுஞ்சாலைகளில் விமானங்கள் தரையிறங்கும் திட்டத்துக்கு இந்திய விமானப்படை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் விமானங்கள் இறங்கும் வகையில் சாலைகளில் ஏற்பாடுகள் செய்யப்படும். தேசிய நெடுஞ்சாலைகளில், சென்னை கிழக்கு கடற்கரை சாலையும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் விஜயவாடா -
ராஜமுந்திரி, பலோடி - ஜெய்சால்மர், ஜாம்ஷெட்பூர் - பாலசோர், பிஜ்பெஹரா - சினாராபாக் உள்ளிட்ட முக்கிய சாலைகளும் இந்த திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.
இயற்கை பேரிடர் ஏற்படும் காலங்களில் நாடு முழுவதையும் இணைக்கும் வகையில் இத்திட்டத்தின் கீழ், தேசிய நெடுஞ்சாலைகள் இணைக்கப்பட்டுள்ளன.