எதிர்க்கட்சியைச் சேர்ந்த 12 மாநிலங்களவை எம்பிக்கள் சஸ்பெண்ட் - முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

எதிர்க்கட்சியைச் சேர்ந்த 12 மாநிலங்களவை எம்பிக்கள் சஸ்பெண்ட் - முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!
எதிர்க்கட்சியைச் சேர்ந்த 12 மாநிலங்களவை எம்பிக்கள் சஸ்பெண்ட் - முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

மழைக்கால கூட்டத் தொடரின் இறுதி நாளன்று மாநிலங்களவை நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்ததாகவும், அவையின் மாண்பை குறைக்கும் வகையில் செயல்பட்டதாகவும் 12 மாநிலங்களவை உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 

சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள மாநிலங்களவை உறுப்பினர்கள் :

காங்கிரஸ்

அகிலேஷ் பிரசாத் சிங், ராஜாமணி படேல், சாயா வர்மா, பீபுண் போரா, சயீத் நாஸிர், ஹுசைன், புலோ தேவி நெதம். 

சிவசேனா

பிரியங்கா சதுர்வேதி, அனில் தேசாய். 

திரிணமூல் காங்கிரஸ்

டோலா சென், சாந்தா சேத்ரி. 

இடதுசாரி கட்சிகள்

இளமாரம் கரீம், பினாய் விஸ்வம். 

குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் இவர்கள் அவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள தடை என என மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் அறிவித்தார். விதிகளை மீறி வன்முறையான முறையில் மாநிலங்களவையில் செயல்பட்டது, அவைக் காவலர்களை தாக்கியது, அவைத் தலைவரின் முடிவுகளை மதிக்காதது உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே இந்த பன்னிரண்டு மாநிலங்களவை உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

விதி எண் 256-இன் கீழ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள இந்த உறுப்பினர்கள் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் திரிணமூல் காங்கிரஸ் மற்றும் சிவசேனாவை சேர்ந்தவர்கள். சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை எதிர்த்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் முழக்கம், முற்றுகையில் ஈடுபட்ட நிலையில், இது குறித்து புகார் அளிக்கப்பட்டிருந்தது.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

“12 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. மக்கள் மன்றத்தில் இத்தகைய செயல்கள் ஜனநாயக உணர்வைக் குறைக்கின்றன. இந்த இடைநீக்கத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று திமுக சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com