கர்நாடகாவில் கொடூரமான சாலை விபத்து ! 12 பேர் உயிரிழந்த பரிதாபம்
கர்நாடக மாநிலம் சிக்பள்ளாபூரில் தனியார் பேருந்தும், மினி வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கர்நாடக மாநிலம் சிக்பள்ளாபூர் மாவட்டத்தில் உள்ள சிந்தாமணியில் இருந்து தனியார் பேருந்து ஒன்று சிக்பள்ளாபூர் நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. வழியில் முருகுமல்ல என்ற பகுதியில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, எதிரே வந்த மினி வேன் மீது மோதியது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த சிந்தாமணி காவல்துறையினர் படுகாயமடைந்தவர்களை மீ்ட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சாலை விபத்தில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் சிக்பள்ளாபூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.