பத்ரிநாத் அருகே சுற்றுலா வாகனம் கவிழ்ந்து விபத்து: 12 பேர் உயிரிழப்பு

உத்தராகண்ட் பத்ரிநாத் அருகே சுற்றுலா வாகனம் ஆற்றில் கவிழ்ந்து 12 பேர் உயிரிழப்பு
விபத்துக்குள்ளான வாகனம்
விபத்துக்குள்ளான வாகனம்புதிய தலைமுறை

உத்தராகண்ட் பத்ரிநாத் அருகே சுற்றுலா வாகனம் ஆற்றில் கவிழ்ந்து 12 பேர் உயிரிழப்பு

டெல்லியின் அருகே உள்ள நொய்டாவிலிருந்து 17 பேர் அடங்கிய டெம்போ வாகனம் ஒன்று பத்ரிநாத் நோக்கி சென்றுள்ளது. ரிஷிகேஷ் பத்ரிநாத் நெடுஞ்சாலை அருகே உள்ள ருத்தரபிரயாக் அருகே வேன் சென்ற சமயம் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் தலைக்குப்புற உருண்டு, நெடுஞ்சாலையில் கீழே ஓடிக்கொண்டிருந்த அலகனந்தா ஆற்றில் விழுந்தது. இந்த ஆறானது 150 அடியிலிருந்து 200 அடி வரை ஆழம் கொண்டதாக இருக்கலாம் என்றும் தெரியவருகிறது.

இதையும் படிக்கலாம் தி.மலை | 'நானே கடவுள்' - மண்டை ஓடுகளுடன் நின்ற கார்; ஆடைகளை களைந்தபடி காவல் நிலையம் சென்ற அகோரி!

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த SDRF மற்றும் உள்ளூர் போலீசார், மீட்புப் படையுடருடன் இணைந்து ஆற்றில் இறங்கி விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.

இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. எஞ்சியுள்ளவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com