மகாராஷ்டிராவில் கொரோனா சிகிச்சை மையத்தில் தீவிபத்து - 12 பேர் உயிரிழப்பு

மகாராஷ்டிராவில் கொரோனா சிகிச்சை மையத்தில் தீவிபத்து - 12 பேர் உயிரிழப்பு

மகாராஷ்டிராவில் கொரோனா சிகிச்சை மையத்தில் தீவிபத்து - 12 பேர் உயிரிழப்பு
Published on

மகாராஷ்டிராவில் கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் பல்கார் மாவட்டத்திலுள்ள வசாய்-விரார் பகுதியில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீவிபத்தால் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த 12 பேர் உயிரிழந்தனர். இதனால் சில நோயாளிகள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிராதான் தொடர்ந்து முதலிடத்தில் இருந்துவருகிறது. இதனால் அங்குள்ள மருத்துவமனைகளில் நோயாளிகள் குவிந்தவண்ணம் உள்ளனர். போதிய அளவு உள் கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணத்தால் அம்மாநில கடும் சிரமங்களை சிந்தித்து வருகிறது.

ஏற்கெனவே சில தினங்களுக்கு முன்பு மகாராஷ்டிராவின் நாசிக்கில் ஆக்ஸிஜன் கசிவு காரணமாக24 பேர் உயிரிழந்தது ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com