கோவிஷீல்டுக்கான டோசேஜ் இடைவெளியை 12-16 வாரம் என அதிகரிக்க பரிந்துரை

கோவிஷீல்டுக்கான டோசேஜ் இடைவெளியை 12-16 வாரம் என அதிகரிக்க பரிந்துரை
கோவிஷீல்டுக்கான டோசேஜ் இடைவெளியை 12-16 வாரம் என அதிகரிக்க பரிந்துரை

தற்போதைய நடைமுறைப்படி, முதல் டோஸ் கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட பின், நான்கு முதல் எட்டு வார இடைவெளிக்கு பின் இரண்டாவது டோஸ் எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படும். இந்த இடைவெளியை 12 முதல் 16 வாரமென அதிகரிக்க நோய்த்தடுப்பு தொடர்பான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு இன்று பரிந்துரைத்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கான தட்டுப்பாடு நாடு முழுவதும் நிலவி வருகிறது. இந்தத் தட்டுப்பாடு காரணமாக, முதல் டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்ட பலரும், இரண்டாவது டோஸ் கிடைக்காமல் தடுமாறிக் கொண்டு இருக்கின்றார்கள். குறிப்பாக பிறவற்றைவிட கோவிஷீல்டு தடுப்பூசிக்கான தட்டுப்பாடு, மிக அதிகமாக இருப்பதாக சில செய்திகள் சொல்கின்றன.

கோவிஷீல்ட் தடுப்பூசிக்கான தட்டுப்பாடு ஒருபக்கம் இருக்க, அதற்கான இரு கட்டத்துக்கும் இடைப்பட்ட கால இடைவெளியை அதிகரிக்க வேண்டுமென நோய்த்தடுப்பு தொடர்பான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு, கொரோனா தடுப்பூசிக்கான நிர்வாகம் குறித்த தேசிய நிபுணர் குழுவிடம் இன்று பரிந்துரைத்துள்ளது.

தங்கள் பரிந்துரையில், கொரோனாவிலிருந்து குணமாகும் நபர்கள், குணமாகி ஆறு மாதத்துக்கு பின் தடுப்பூசி எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படலாம் என்பதையும் வலுயுறுத்தி இருக்கின்றனர் ஆலோசனை குழுவினர்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அனுமதி தரும்பட்சத்தில் இந்த இடைவெளி நீட்டிப்பும், குணமானோருக்கு தடுப்பூசி அளிப்பதும் அமலுக்கு வரும் என சொல்லப்பட்டுள்ளது.

இவை தவிர, "கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி வேண்டுமா வேண்டாமா என்பது, அவர்களின் சுயவிருப்பமாக மாற்றப்படுவது பற்றி ஆலோசித்து வருகிறோம். அதேபோல பாலூட்டும் நிலையிலுள்ள தாய்மார்கள் தடுப்பூசி போடுவதற்கான தடையும் நீக்கப்பட ஆலோசிக்கப்படுகிறது" என ஆலோசனை குழுவினர் கூறியுள்ளனர். டோசேஜ் அளவு தொடர்பாக எந்த மாற்றத்தையும் ஆலோசனைக் குழு பரிந்துரைக்கவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com