5 வயது சிறுமியின் தலையில் கல்லைப்போட்டு கொன்ற 11 வயது சிறுவன்

5 வயது சிறுமியின் தலையில் கல்லைப்போட்டு கொன்ற 11 வயது சிறுவன்

5 வயது சிறுமியின் தலையில் கல்லைப்போட்டு கொன்ற 11 வயது சிறுவன்
Published on

11 வயது சிறுவன் ஒருவன் 5 வயது சிறுமியை கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த 11 வயது சிறுவன் ஒருவன் 5 வயது சிறுமியை, தலையில் கல்லைப் போட்டு கொன்றதாகச் சொல்லப்படுகிறது. இது குறித்து காவல் அதிகாரிகள் கூறும்போது “ செல்போனில் விளையாடிக் கொண்டிருந்த போது, சிறுமி சிறுவனை வீழ்த்தியதாகத் தெரிகிறது. இதனால் கோபமுற்ற சிறுவன் சிறுமியின் தலையின் மீது கல்லைப் போட்டு நசுக்கியுள்ளான்.  இதில் சம்பவ இடத்திலேயே சிறுமி உயிரிழந்தாள். கைது செய்யப்பட்ட மாணவன், சிறுமி அவனது செல்லப்பிராணியை (எலி) கொன்று விட்டதாகவும் அதனாலேயே அவளை கொன்றுவிட்டதாகக் கூறினான்” என்றார். சிறுமியின் உடலைக் கைப்பற்றிய லாசுடியா நகர் போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com