"நிமிஷத்துக்கு 115 பிரியாணி ஆர்டர்" - ஸ்விக்கி வெளியிட்ட ருசிகர தகவல்

"நிமிஷத்துக்கு 115 பிரியாணி ஆர்டர்" - ஸ்விக்கி வெளியிட்ட ருசிகர தகவல்
"நிமிஷத்துக்கு 115 பிரியாணி ஆர்டர்" - ஸ்விக்கி வெளியிட்ட ருசிகர தகவல்

இந்தியர்களின் பிரியமான உணவுப்பட்டியலில் பிரியாணிக்கு தான் என்றுமே முதலிடம். பிரபல உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி, 2021ஆம் ஆண்டில் ஒரு நிமிடத்திற்கு 115 பிரியாணி ஆர்டர்களை பெற்றதாக சுவையூட்டும் தகவலை வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் முன்னணி ஆன்லைன் உணவு டெலிவரி சேவை நிறுவனமான ஸ்விக்கி, தங்களுக்கு கிடைத்த உணவு ஆர்டர்களின் அடிப்படையில் உணவு விற்பனை தொடர்பான புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டும் இந்தியர்களின் பிரியமான உணவாக பிரியாணியே நீடிக்கிறது. ஸ்விக்கி தளத்தில் இந்த ஆண்டு மட்டும் ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 115 பிரியாணி ஆர்டர்கள் வந்துள்ளன என்றால் பிரியாணி மீதான இந்தியர்களின் தீராத காதலை புரிந்து கொள்ள முடியும். உணவு பட்டியலில் பிரியாணிக்கு முதலிடம் என்றால், திண்பண்டங்கள் பட்டியலில் சமோசா மற்றும் பாவ் பஜ்ஜி ஆதிக்கம் செலுத்துகிறது.

இனிப்பு வகைகளில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்டு குலோப் ஜாமுன் மற்றும் ரசமலாய் என்ற தகவலை வெளியிட்டு நாவூற வைத்துள்ளது ஸ்விக்கி. சென்னைவாசிகள் அதிகமாக ஆர்டர் செய்த உணவுபட்டியலில் சிக்கன் பிரியாணிக்கே முதலிடம். சிக்கன் பிரைடு ரைஸ்,மட்டன் பிரியாணி, பன்னீர் பட்டர் மசாலா, நெய் பொங்கல் ஆகியவற்றையும் நமது சென்னை வாசிகள் அதிகளவில் ருசித்துள்ளனர்.

சென்னையை போலவே ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ நகர மக்களும் சிக்கன் பிரியாணிக்கு தான் அடிமை.இவை தவிர ஆரோக்கியம் சார்ந்த உணவுகளுக்கு ஆதரவு பெருகியுள்ளது. பெங்களூரு, ஐதராபாத், மும்பை மக்கள் ஆரோக்கியம் சார்ந்த உணவுகளை அதிகமாக ஆர்டர் செய்துள்ளனர் என்கிறது ஸ்விக்கி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com