மலேசியாவில் தவித்த 113 இந்தியர்கள்  இந்தியா வந்தடைந்தனர்.. 9 பேருக்கு கொரோனா அறிகுறி?

மலேசியாவில் தவித்த 113 இந்தியர்கள் இந்தியா வந்தடைந்தனர்.. 9 பேருக்கு கொரோனா அறிகுறி?

மலேசியாவில் தவித்த 113 இந்தியர்கள் இந்தியா வந்தடைந்தனர்.. 9 பேருக்கு கொரோனா அறிகுறி?
Published on

மலேசியாவில் சிக்கித் தவித்த 113 இந்தியர்கள் ஏர் ஏசியா விமானம் மூலம் இந்தியா வந்தடைந்தனர்.


கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு இந்தியாவில் இதுவரை 9 நபர்கள் பலியாகியுள்ள நிலையில் பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 471 ஆக அதிகரித்துள்ளது. இதனால் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன.

முன்னதாக வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள் வீடியோ காணொளி மூலமாக தங்களை இந்தியா கொண்டு வர மத்திய அரசுக்கு நடவடிக்கை எடுக்க
வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர். இதனையடுத்து வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை இந்தியாவிற்கு கொண்டுவர முயற்சிகள்
நடைபெற்று வந்தன. அந்த வகையில் மலேசியா கோலாலம்பூரில் சிக்கித் தவித்த இந்தியர்கள் 113 நபர்கள் ஏர் ஏசியா விமானம் மூலம் இந்தியா அழைத்து
வரப்பட்டுள்ளனர். இதில் 9 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மலேசியாவில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள் பரங்கிமலையில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com