சிறுவனைப் பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவர் கைது
ஹைதராபாத்தில் ஓரினச் சேர்க்கை ஆசை கொண்ட இளைஞர், சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதரபாத்தை சேர்ந்த சிறுவன் சுரேஷ் (11). வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற இவர் கடந்த சில தினங்களுக்கு முன் காணாமல் போனார். இதனையடுத்து போலீஸார் சுரேஷை தீவிரமான தேடி வந்தனர். இந்நிலையில் அங்குள்ள அரசாங்க பள்ளி ஒன்றின் மொட்டை மாடியில் இன்று சுரேஷ் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து பள்ளி கட்டிடத்தின் அருகாமையில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிறுவன் பள்ளிக்கு செல்லும்போது அவரை பின்தொடர்ந்த நபரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில் சுரேஷை தான் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக அந்த இளைஞர் ஒப்புக் கொண்டார். பாலியல் வன்கொடுமை குறித்து சுரேஷ் தன் பெற்றோரிடம் கூறி விடுவேன் எனக் கூறியதால் இரும்பு கம்பியை தலையில் அடித்து சுரேஷை கொலை செய்ததாகவும் அந்த இளைஞர் தெரிவித்தார். மேலும் கடந்த இரண்டு வருடங்களில் இதேபோன்று கிட்டத்தட்ட 15 ஆண் குழந்தைகளுக்கு பிஸ்கட், சாக்லேட் கொடுத்து ஏமாற்றி பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாகவும் அந்த இளைஞர் ஒப்புக் கொண்டார்.