போலீஸ் பாதுகாப்போடு பயணித்த 11 பெண்கள் : மிரட்டிய பக்தர்கள்.. நிறுத்தப்பட்ட பயணம்..

போலீஸ் பாதுகாப்போடு பயணித்த 11 பெண்கள் : மிரட்டிய பக்தர்கள்.. நிறுத்தப்பட்ட பயணம்..
போலீஸ் பாதுகாப்போடு பயணித்த 11 பெண்கள் : மிரட்டிய பக்தர்கள்.. நிறுத்தப்பட்ட பயணம்..

சென்னையிலிருந்து சபரிமலை சென்ற 11 பெண்கள் பம்பாவில் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், காவல்துறையினரின் பாதுகாப்புடன் தங்கள் பயணத்தை தொடர்ந்தனர்.

பம்பையில் தடுத்து நிறுத்தப்பட்டிருந்த சென்னையை சேர்ந்த 11 பெண்களும் காவல்துறையினர் பாதுகாப்புடன், மீண்டும் தங்கள் பயணத்தை தொடங்கினர். சபரிமலையை நோக்கி செல்லும் அவர்களுக்கு கூடுதலான காவல்துறையினர் பாதுகாப்பு அளித்து உடன் சென்றனர். ஆனால் அவர்கள் வருகையை எதிர்த்த் ஐயப்ப பக்தர்கள் முழக்கங்களையும், ஐயப்பனின் பக்தி கோஷங்களையும் எழுப்பினர். பக்தர்களின் கோஷப் போராட்டம், தள்ளுமுள்ளாக மாறி, பின்னர் கலவரம் ஏற்படலாம் என்பதால், அங்கு பதட்டமான சூழல் நிலவியது. இருப்பினும் நிலைமையை கட்டுக்குள் வைப்பதற்காக அங்கு ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். பெண்களின் வருகைக்கு கோயிலின் குருக்கள்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இதற்கிடையே மலை ஏறிக்கொண்டிருக்கும் போது, பக்தர்கள் கூட்டத்தில் குறிப்பிட்டோர் 11 பெண்கள் பயணத்தை கூட்டமாக தாக்க முயன்றனர். இதனால் பதட்டமான சூழல் ஏற்பட்டது. நிலைமையை கட்டுப்படுத்த 11 பெண்களின் பயணத்தை நிறுத்திய காவலர்கள், அவர்களை பம்பா காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர்.

முன்னதாக, சென்னையிலிருந்து சபரிமலை சென்ற 11 பெண்கள் பம்பை அருகே சென்றுகொண்டிருந்தனர். அப்போது பம்பை விநாயகர் கோவிலில் பெண்களுக்கு இருமுடி கட்ட அர்ச்சகர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டதால் தமிழக பெண்கள் மற்றும் பம்பை அர்ச்சகர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதையடுத்து 6 பெண்கள் தாங்களே இருமுடி கட்டிக்கொண்டு காலை 5.30 மணிக்கு சபரிமலை நோக்கி நடைபயணம் மேற்கொண்டனர். 11 பெண்களில் 9 பேர் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதால் ஐயப்ப பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பின்னர் பம்பையிலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் சென்னையை சேர்ந்த 11 பெண்களும் ஐயப்ப பக்தர்களால் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தனர். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com