“உடல் சரியாக எரியவில்லை” - பிணத்தின் மீது பெட்ரோல் ஊற்றிய உறவினர்களால் ஏற்பட்ட தீ விபத்து

“உடல் சரியாக எரியவில்லை” - பிணத்தின் மீது பெட்ரோல் ஊற்றிய உறவினர்களால் ஏற்பட்ட தீ விபத்து
“உடல் சரியாக எரியவில்லை” - பிணத்தின் மீது பெட்ரோல் ஊற்றிய உறவினர்களால் ஏற்பட்ட தீ விபத்து

தற்கொலை செய்து கொண்டவரை எரியூட்டும்போது “உடல் சரியாக எரியவில்லை” என்று கூறி பெட்ரோல் ஊற்றிய உறவினர்கள் மீது தீ பரவி 11 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் தடிவாலா பகுதியை சேர்ந்தவர் தீபக் கும்ளே. 80 வயதான இவர் தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். இதனை தொடர்ந்து தீபக் கும்ளேவின் உடலிற்குன் இறுதிச் சடங்குகள் செய்த அவரது குடும்பத்தினர் தகனம் செய்ய அப்பகுதியில் உள்ள சுடுகாட்டிற்கு கொண்டு சென்றனர். அங்குள்ள தகன மேடையில் தீபக் கும்ளேவின் உடலை வைத்து எரியூட்டினர்.

அப்போது உடல் சரியாக எரியவில்லை என அருகில் நின்ற ஒருவர் எரிந்துகொண்டிருந்த சிதையில் பெட்ரோலை ஊற்றினார். இதனால் சிதையில் இருந்து பயங்கர வேகத்தில் தீ கொளுந்துவிட்டு பரவியபடி எரிந்தது. தீ வேகமாக எரிந்ததால் தகன மேடை அருகில் இருந்தவர்கள் மீது தீக்காயம் ஏற்பட்டது. இதில் 11 பேர் படுகாயமடைந்தனர். இதனை தொடர்ந்து தீக்காயமடைந்த 11 பேரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com