முதியோரின் நலனில் அக்கறையில்லாத மாநிலங்கள்: உச்சநீதிமன்றம் அதிருப்தி..!

முதியோரின் நலனில் அக்கறையில்லாத மாநிலங்கள்: உச்சநீதிமன்றம் அதிருப்தி..!

முதியோரின் நலனில் அக்கறையில்லாத மாநிலங்கள்: உச்சநீதிமன்றம் அதிருப்தி..!
Published on

முதியோரின் நலனில் ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட 11 மாநிலங்கள் அக்கறை செலுத்தவில்லை என்று உச்சநீதிமன்றம் அதிருப்தி வெளிப்படுத்தியுள்ளது.

மத்திய முன்னாள் அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான அஸ்வனி குமார், முதியோர் பாதுகாப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். மூத்த குடிமக்களின் நலனைக் காக்க போதிய நிதியை மத்திய அரசு ஒதுக்குவதில்லை என்றும், இதன் காரணமாக அவர்களில் பெரும்பாலானோர் வறுமையில் உழன்று வருவதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தார்.

இதுதொடர்பான வழக்கு நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இதுவரை 23 மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் பதில் மனு தாக்கல் செய்துள்ளன என்று கூறினார். ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, அருணாச்சல பிரதேசம், மத்தியப் பிரதேசம், கோவா உள்ளிட்ட 11 மாநிலங்கள் மட்டுமே அத்தகைய மனுக்களை சமர்பிக்கவில்லை என்று தெரிவித்தார்.

இதற்கு கடும் அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், இதன்மூலம் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு முதியோர் நலனில் எந்த அக்கறையும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது என்றனர். மேலும், பதில் மனுக்களை 3 வாரங்களுக்குள் தாக்கல் செய்யுமாறும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com