\
ஜார்க்கண்டில் குண்டு வெடிப்பு: 11 வீரர்கள் படுகாயம்!

ஜார்க்கண்டில் குண்டு வெடிப்பு: 11 வீரர்கள் படுகாயம்!

ஜார்க்கண்டில் குண்டு வெடிப்பு: 11 வீரர்கள் படுகாயம்!
Published on

ஜார்க்கண்ட்டில் இன்று அதிகாலை நடந்த சிறிய ரக குண்டுவெடிப்பில் பாதுகாப்பு படையை சேர்ந்த 11 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். 

ஜார்கண்ட் மாநிலம் சராய்கெல்லா (Saraikella) பகுதியில் உள்ள குச்சாய் என்ற இடத்தில் மாவோயிஸ்ட்டுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கை களுக்காக, படையினர் முகாமிட்டுள்ளனர். இன்று அதிகாலை 4.53 மணியளவில் அங்கு சிறிய ரக குண்டு திடீரென்று வெடித்தது. இதையடுத்து, மாவோயிஸ்டுகள், பாதுகாப்பு படையினர் மீது சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படையினரும் பதிலுக்கு தாக்குதல் தொடுத் தனர். இதையடுத்து அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். 

இந்த குண்டு வெடிப்பில் 11 வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்த வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் ராஞ்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com