\
கர்நாடகா: லாரி மீது மினிபஸ் மோதி பயங்கர விபத்து; 11 பேர் பலி

கர்நாடகா: லாரி மீது மினிபஸ் மோதி பயங்கர விபத்து; 11 பேர் பலி

கர்நாடகா: லாரி மீது மினிபஸ் மோதி பயங்கர விபத்து; 11 பேர் பலி
Published on

கர்நாடகாவில் லாரிமீது மினிபஸ் மோதியதில் விபத்து ஏற்பட்டு 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கர்நாடகா மாநிலத்தில் ஹூப்லி - தர்வாத் பைபாஸில் இந்த கொடூர விபத்து நடந்துள்ளது. காலை 8 மணியளவில் பயணிகளை ஏற்றிக்கொண்டுவந்த மினிபஸ் எதிரே வந்த லாரிமீது மோதியதில் ட்ரைவர் உட்பட பேருந்திலிருந்த 10 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

காயமடைந்த பயணிகளை கர்நாடகா மருத்துவ கல்லூரி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். அதில் 5 பேரின் நிலை மோசமாக உள்ளதாகவும், மற்ற 7 பேரை வேறு இரண்டு மருத்துவமனைகளில் சேர்த்துள்ளதாகவும் ANIக்கு கொடுத்த தகவலில் தெரிவித்தனர்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில், ‘’சாலை விபத்தில் பல உயிர்களை இழந்திருப்பது நினைத்து வருத்தமாக உள்ளது. உயிர்களை இழந்த குடுபங்களை நினைத்து வருத்தமாக உள்ளது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்’’ என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com