உங்க பான் கார்டின் நிலை? இங்கு தெரிந்துகொள்ளலாம்!

உங்க பான் கார்டின் நிலை? இங்கு தெரிந்துகொள்ளலாம்!

உங்க பான் கார்டின் நிலை? இங்கு தெரிந்துகொள்ளலாம்!
Published on

பான் கார்டு செயலில் உள்ளதா என்பதை சுலபமாக தெரிந்து கொள்ளும் வசதியை வருமான வரித் துறை செய்துள்ளது. இதற்காக, வருமான வரித்துறையின், www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்தில் சென்று தகவலை சரிபார்த்து கொள்ள முடியும்.

வருமான வரித் துறையின் இணையதளத்தில், 'சர்வீசஸ்' என்ற தலைப்பின் கீழ், 'நோ யுவர் பான்' என்பதற்குள் நுழைய வேண்டும். அங்கு பெயர், முகவரி உள்ளிட்ட அடிப்படை தகவல்கள் கேட்கப்படும். அதைத் தொடர்ந்து அலைபேசிக்கு ஒருமுறை பயன்படுத்தக்கூடிய ரகசிய எண் வரும். அதைப் பதிவு செய்தால், நம் பான் கார்டு செயலில் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இந்நிலையில் மோசடியாக வாங்கப்பட்ட 11.44 லட்சம் பான் கார்டுகளை மத்திய அரசு முடக்கியுள்ளதாக மத்திய நிதித்துறை இணை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வார் தெரிவித்துள்ளார்.


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com