\
பேருந்து-லாரி பயங்கர மோதல்: 11 பேர் உயிரிழப்பு

பேருந்து-லாரி பயங்கர மோதல்: 11 பேர் உயிரிழப்பு

பேருந்து-லாரி பயங்கர மோதல்: 11 பேர் உயிரிழப்பு
Published on: 

மகாராஷ்ட்ராவில் பேருந்தும் லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 15 பேர் படுகாயமடைந் தனர்.

மகாராஷ்டிர மாநிலம் துலே மாவட்டத்தில் இருக்கிறது நிம்குல் கிராமம். இங்குள்ள ஷஹாடா-தொண்டச்சா நெடுஞ்சாலை யில் நள்ளிரவு அவுரங்காபாத் நோக்கி, பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.அப்போது எதிரில் இருந்து கண்டெய்னர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. இரண்டும் திடீரென மோதிய விபத்துக்குள்ளானது.

இதில் லாரி மற்றும் பேருந்து ஓட்டுநர்கள் உட்பட 11 பேர் அந்த இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். 15 பேர் படுகாயம டைந்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார், உள்ளூர்காரர்களுடன் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு, துலே மருத்துவமனையில் சேர்த்தனர். 

போலீசார் இதுபற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com