கார்- வேன் மோதல்: திருமணத்துக்கு சென்ற 11 பேர் பலி!

கார்- வேன் மோதல்: திருமணத்துக்கு சென்ற 11 பேர் பலி!
கார்- வேன் மோதல்: திருமணத்துக்கு சென்ற 11 பேர் பலி!

காரும் வேனும் மோதிக்கொண்ட விபத்தில் திருமணத்துக்கு சென்று வந்த 11 பேர் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயமடைந்தனர்.

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் பகுதியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிலர்  தங்கள் உறவினர் திருமணத்துக்குச் சென்றுவிட்டு வேனில் திரும்பிக் கொண்டிருந்தனர். ராம்கார் கிராமத்தின் அருகில் நள்ளிரவு 12 மணியளவில் வேன் வந்துகொண்டிருந்தபோது, மற்றொரு வாகனத்தின் மீது மோதியது. மோதிய வேகத்தில் திருமணத்துக்கு சென்று வந்த வேன், 50 அடி தூரத்துக்குத் தூக்கி வீசப்பட்டது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். 2 பேர் கடுமாயமடைந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார், படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com