விடாத தேர்வு பயம்... தூக்கத்தை கட்டுப்படுத்த மாத்திரை சாப்பிட்ட மாணவி! மூளையில் ஏற்பட்ட பாதிப்பு...!

உத்தரப்பிரதேசத்தில் தேர்வுக்கு தயாரிக்கும் போது தூக்கத்தினை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக தூக்க எதிர்ப்பு மாத்திரைகளை பயன்படுத்திய மாணவிக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
தூக்கம் - மாத்திரை
தூக்கம் - மாத்திரைபுதிய தலைமுறை

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் 10 வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் ஆண்டு தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். தேர்வில் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்று தீவிரமாக படித்துவந்துள்ளார் அவர். அந்நேரத்தில் எல்லோரையும் போல அவருக்கும் சாதாரணமாக தூக்கம் வந்துள்ளது.

ஆனால் அந்த தூக்கத்தால் படிப்பு தடைபடுமே என நினைத்த அந்த மாணவி, தூக்க எதிர்ப்பு மாத்திரையை உட்கொண்டு வந்துள்ளார். தொடர்ச்சியாக மாத்திரை உட்கொண்டதால், ஒருநாள் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

தூக்கம் - மாத்திரை
’படிக்காதவன்’ பாணியில் வீங்கிய வயிறு! 24 ஆண்டுகளில் 17 முறை கர்ப்பிணி வேடம்.. அரண்டு போன போலீசார்!

இதனை அறிந்த பெற்றோர்கள், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று அவருக்கு பரிசோதனை செய்துள்ளனர். அங்கேதான் அம்மாணவி தூக்க எதிர் மாத்திரைகளை உட்கொண்டிருப்பது தெரியவந்தது. இதனால் மாணவிக்கு நரம்பு வீக்கம் ஏற்பட்டு, ரத்தம் உறையாமை போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்று தெரிவித்த மருத்துவர்கள் மூளையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.

தற்சமயங்களில் விழித்து படிக்க வேண்டும் என்பதற்காக டீ, காபி போன்றவை அதிகமாக எடுத்துக்கொள்ளும் சூழல் நம்மில் பலருக்கும் இருக்கும். ஆனால் அதற்காக மாத்திரை எடுத்துக்கொண்டு தூக்கத்தினை கட்டுப்படுத்திய மாணவியின் இச்செயல், பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதுவும் மாணவியின் இச்செயல் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யும் அளவிற்கு முடிந்துள்ளது என்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூக்கம் - மாத்திரை
ஃபோபியா பலவிதம்: சோம்னிஃபோபியா... துக்கத்தைத் தூக்கலாக்கும் தூக்கம்!

அன்றாடம் 6 - 8 மணி நேர தூக்கம் என்பது மனிதர்கள் அனைவருக்குமே அவசியம். வயதுக்கேற்றார்போல இந்த தூக்கத்தின் நேரம் கூடவோ குறையவோ செய்யலாம். அதைத்தாண்டி தூக்கத்தை கட்டுப்படுத்துவதென்பது தவறு.

தூக்கத்தை கட்டுப்படுத்த எந்த வழியில் நாம் செயற்கையாக, சுயமாக முயன்றாலும் அது உடலுக்கு கேடுதான். ‘எனக்கு தூக்கமே வரவில்லை’ என்பதுகூட ஆபத்துதான். சுருக்கமாக சொன்னால் தூக்கம் என்பது, பசி போல... பசிக்கும்போது சாப்பிட்டுவிடுவதுபோல, தூக்கம் வரும்போது தூங்கி எழுவது நல்லது. இதையெல்லாம்தாண்டி, தூக்கத்தில் சிக்கல் உள்ளது என்போர் நிச்சயம் மருத்துவ ஆலோசனை பெறவும். குறிப்பாக மருந்து மாத்திரைகளை மருத்துவ பரிந்துரையின்றி உட்கொள்ள வேண்டாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com