இந்தியா
கொரோனாவை வென்ற 103 வயது முதியவர்: சைலஜா டீச்சர் நெகிழ்ச்சி!
கொரோனாவை வென்ற 103 வயது முதியவர்: சைலஜா டீச்சர் நெகிழ்ச்சி!
கேரளாவைச் சேர்ந்த 103 வயது முதியவர் ஒருவர் கொரோனாவிலிருந்து மீண்டிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால் அதிகம் பாதிப்படைவது முதியவர்கள்தான். ஏனென்றால், வயதாகிவிட்டாலே நீரிழிவு நோய், இதயப் பிரச்சனைகள், கல்லீரல் பிரச்சனை உட்பட பல்வேறு பிரச்சனைகளால் பாதிக்கப்படுகிறார்கள்.
அதனால், கொரோனா தொற்று ஏற்பட்டால், அதிகம் பாதிக்கப்படுவதும் அவர்களாகவே இருக்கிறார்கள். இந்நிலையில், கேரளாவில் 103 வயது முதியவர் கொரோனாவிலிருந்து மீண்டிருப்பதை, அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா டீச்சர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், ”103 வயதாகும் ஆலுவாவைச் சேர்ந்த பரீத் கொரோனாவை வென்றுள்ளார். எங்கள் சுகாதாரத்துறை ஊழியர்கள் கொரோனாவை தோற்கடித்துள்ளார்கள்” என்று நெகிழ்ச்சியோடு பதிவிட்டுள்ளார்.