"100 முதல் 150 பேர் வரை இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது" - உத்தராகண்ட் தலைமைச் செயலாளர்

"100 முதல் 150 பேர் வரை இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது" - உத்தராகண்ட் தலைமைச் செயலாளர்

"100 முதல் 150 பேர் வரை இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது" - உத்தராகண்ட் தலைமைச் செயலாளர்
Published on

உத்தராகண்ட் மாநிலத்தில் கடும் பனிச்சரிவால் தெளளிகங்கா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 100 முதல் 150 பேர் இறந்திருக்கலாம் என்று அம்மாநில தலைமைச் செயலாளர் ஓம்பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

உத்தராகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தின் தபோவன் பகுதியில் உள்ள ரெய்னி கிராமத்தில் உள்ள மின் திட்டத்திற்கு அருகே ஏற்பட்ட பனிச்சரிவைத் தொடர்ந்து தெளளிகங்கா ஆற்றின் நீர்மட்டம் திடீரென கிடுகிடுவென உயர்ந்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆற்றின் கரையோரம் அமைந்திருந்த பல வீடுகள் சேதமானதோடு, பலர் மாயமாகி உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

இது குறித்து அமாநில தலைமைச் செயலாளர் ஓம் பிரகாஷ் கூறும்போது "சமோலி மாவட்டத்தில் ஏற்பட்ட பனிச்சரிவு வெள்ளப்பெருக்கில் 100 முதல் 150 பேர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழு பாதிக்கப்பட்டுள்ள இடத்துக்கு விரைந்துள்ளது. அப்பகுதிக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com