கினியா
கினியாமுகநூல்

கினியா | ரத்த குளமாக மாறிய கால்பந்து மைதானம்! ரசிகர்களுக்கிடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் 100 பேர் பலி!

கடந்த 2021 ஆம் ஆண்டு ஆட்சிக்கவிழ்ப்பில் ஆட்சியைப் பிடித்த கினியாவின் ராணுவத் தலைவர் மமதி டூம்பூயாவைக் கௌரவிக்கும் வகையில், இந்த கால்பந்து போட்டி நடைப்பெற்றதாக கூறப்பட்டது.
Published on

கினியாவில் நடந்த கால்பந்து போட்டியில் ரசிகர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 100 பேர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்பிரிக்கா நாடான கினியாவின் இரண்டாவது பெரிய நகரமான N'Zerekore இல் கடந்த ஞாயிற்றுக்கிழமை கால்பந்துப்போட்டி நடைப்பெற்றது. இந்தப்போட்டியானது, கடந்த 2021 ஆம் ஆண்டு ஆட்சிக்கவிழ்ப்பில் ஆட்சியைப் பிடித்த கினியாவின் ராணுவத் தலைவர் மமதி டூம்பூயாவைக் கௌரவிக்கும் வகையில் நடைப்பெற்றதாக கூறப்பட்டது.

போட்டியில் முடிவை நடுவர் ஒருவர் சர்ச்சையாக வழங்கியதாக கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த ரசிகர்கள் மைதானத்தில் உள்ளே முற்றுகையிட ஆரம்பித்ததாக கூறப்படுகிறது. இதனால், வெடித்த கலவரத்தில் 100 க்கும் மேற்ப்பட்டோர் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்கள் அப்பாவி மக்கள் என்று கூறப்படுகிறது.

இது குறித்து மருத்துவர்கள் தெரிவிக்கையில், “மருத்துவமனையில் கண்ணுக்கு எட்டிய தூரம் , நடைப்பாதை என அனைத்திலும் இறந்த உடல்கள்தான் நிரம்பி வழிகிறது.” என்று தெரிவித்துள்ளார்.

டசன் கணக்கில் மனிதர்கள் இறந்துகிடக்கும் காட்சிகளும், மக்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் வன்முறை காட்களும் வெளியாகி காண்போரை பதைப்பதைக்க வைத்துள்ளது. மேலும், போராட்டக்காரர்கள் N'Zerekore காவல்நிலையத்தை சேதப்படுத்தி தீ வைத்த காட்சிகளும் வெளியாகியுள்ளன.

கினியா
பாலியல் தொழிலாளர்களுக்கும் மகப்பேறு விடுப்பு, ஓய்வூதியம்.. வரலாற்றில் இடம்பிடித்த பெல்ஜியம்!

கினியாவின் ராணுவத் தலைவர் மமதி டூம்பூயா வரவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் பங்கேற் இருப்பதாக கூறப்படுவதால், இதுப்போன்ற போட்டிகள் அடிக்கடி நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால், அங்கு இது போன்ற சிறு சிறு வன்முறைகள் நடைப்பெறுவது வாடிக்கையாகி வருவதாக கூறப்படுகிறது.

ஏராளமான இயற்கை வளங்கள் இருந்தபோதிலும், கினியா பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் உள்ளது. தேசம் பல தசாப்தங்களாக சர்வாதிகார ஆட்சியை அனுபவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com