மதரஸாவில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

மதரஸாவில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

மதரஸாவில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை
Published on

டெல்லியில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

டெல்லியின் காசிபூர் பகுதியில் வசித்து வரும் 10வயது சிறுமியை உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சிறுவன் கடந்த 21ஆம் தேதி கடத்தி சென்றுள்ளான். காசியாபாத்தில் தான் படித்து வரும் மதரஸாவில் அந்தச் சிறுமியை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். சிறுமி காணாமல் போனதை அடுத்து இதுகுறித்து காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை கொண்டு காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒரு நபர் அந்தச் சிறுமியை அழைத்து செல்வது தெரியவந்தது. இதனையடுத்து தொடர்ந்து நடைப்பெற்ற விசாரணையில் சிறுமி உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள மதரஸாவில் இருப்பது தெரியவந்தது. அங்கு விரைந்த காவல்துறையினர் சிறுமியை மீட்டனர். இவ்விவகாரத்தில் 17வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது, சிறுமியை மருத்துவ பரிசோதனை செய்ததில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில் ஒரு சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளார். மதரஸாவில் அந்தச் சிறுவனுடன் மேலும் மூன்று பேர் இருந்துள்ளனர். அவர்களுக்கு இவ்விவகாரத்தில் தொடர்புள்ளதா என விசாரித்து வருகிறோம் என தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் மொபைல் போன் மூலம் சிறுமி மிட்கப்பட்டுள்ளார். சிறுமி வீட்டில் இருந்து செல்லும்போது செல்போனை கொண்டு சென்றுள்ளார்.அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.அவரது செல்போனுக்கு வந்த பல்வேறு எண்களை தொடர்புகொண்டு சிறுமி இருக்கும் இடத்தை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com