\
ஜம்மு பனிச்சரிவு: 10 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

ஜம்மு பனிச்சரிவு: 10 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

ஜம்மு பனிச்சரிவு: 10 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
Published on: 

ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது.

காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் உள்ள குரஸ் ராணுவ முகாம் பகுதியில் இருவேறு இடங்களில் நேற்று பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் பல வீரர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வந்தது. தற்போது வரை 10 வீரர்கள் உயிரிழந்ததாக ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சில வீரர்களை தேடும் பணி நடைபெற்றுவருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com