\
தாவூத் இல்ல திருமணத்தில் 10 போலீசார்!

தாவூத் இல்ல திருமணத்தில் 10 போலீசார்!

தாவூத் இல்ல திருமணத்தில் 10 போலீசார்!
Published on

நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராஹிம் உறவினர் திருமணத்துக்குச் சென்றது தொடர்பாக, 10 போலீசாரிடம் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

மும்பையின் நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் தொடர்ந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். அவரது உறவினருக்கு மே 19-ம் தேதி நாசிக்கில் திருமணம் நடைபெற்றது. இதில் முக்கிய புள்ளிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த திருமணத்தில் மும்பை நாசிக் பகுதியை சேர்ந்த 10 போலீசார் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. எனவே, திருமணத்தில் கலந்து கொண்ட போலீசாரிடம் விசாரணை நடத்த கமிஷனர் ரவீந்தர் சிங்கால் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக, இன்னும் இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com