குடியரசுத் தலைவர்
குடியரசுத் தலைவர் முகநூல்

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் ஆற்றிய உரை; முக்கிய 10 அம்சங்கள் என்ன?

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் ஆற்றிய உரையில் இடம்பெற்ற 10 முக்கிய அம்சங்களை பார்க்கலாம்...
Published on

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் ஆற்றிய உரையில் இடம்பெற்ற 10 முக்கிய அம்சங்களை பார்க்கலாம்...

1.உரையாற்றிய திரௌபதி முர்மு, 18-ஆவது மக்களவைத் தேர்தலை சிறப்பாக நடத்தியதாக தேர்தல் ஆணையத்திற்கு நன்றி கூறினார்.

2.இந்த ஆட்சியின் முதல் பட்ஜெட் அரசின் தொலைநோக்கு திட்டங்களை உள்ளடக்கியதாக இருக்கும். இந்தியாவை மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாற்ற அரசு செயல்பட்டு வருகிறது.

3.10 ஆண்டுகளில் அரசின் திட்டங்கள் மூலம் 25 கோடி இந்தியர்கள் வறுமையில் இருந்து வெளியேறி இருப்பதாகவும் குடியரசுத் தலைவர் பெருமிதம் தெரிவித்தார்.

4.இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்காக 10 ஆண்டுகளில் பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டை நான்கு மடங்கு உயர்த்தி இருக்கிறது.

5. வடகிழக்கு மாநிலங்களில் அமைதியை ஏற்படுத்த அரசு தொடர்ந்து முனைப்பு காட்டி வருகிறது.

குடியரசுத் தலைவர்
தலைப்புச் செய்திகள்| இறுதிப்போட்டிக்குள் இந்தியா முதல் ஒசூரில் பன்னாட்டு விமானநிலையம் அறிவிப்பு வரை!

6. 10 ஆண்டுகளில் பாதுகாப்புத்துறையின் ஏற்றுமதி 18 மடங்கு அதிகரித்து 21 ஆயிரம் கோடி ரூபாயை எட்டி இருக்கிறது.

7.நவீனத்துவம் அவசியம் என்பதால் ஆயுதப்படைகளில் தொடர்ந்து சீர்திருத்தம் செய்ய வேண்டும்.

8.70 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் இலவச சிகிச்சை பெற ஏற்பாடு செய்யப்படும்.

9.அண்மையில் நடந்த வினாத்தாள் கசிவு சம்பவங்கள் குறித்து நியாயமான முறையில் விசாரணை நடத்தவும், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

10.2036-ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்திய ஒலிம்பிக் சங்கம் தயாராகி வருகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com