கடல் வழியாக 10 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை கடத்தத் திட்டம்: மடக்கிப் பிடித்த போலீசார்

கடல் வழியாக 10 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை கடத்தத் திட்டம்: மடக்கிப் பிடித்த போலீசார்
கடல் வழியாக 10 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை கடத்தத் திட்டம்: மடக்கிப் பிடித்த போலீசார்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல் வழியாக 10 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் கடத்த முயன்றோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கடல் மார்க்கமாக இலங்கைக்கு போதை பொருட்கள் கடத்த இருப்பதாக ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்நிலையில் தேவிபட்டினம், திருவாடானை ஆகிய கடற்கரைச் சாலைகளில் சிறப்பு குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஒரு வாரகாலமாக இரவு பகலாக ரோந்து பணியால் ஈடுபட்டு வந்தனர்.


அப்போது நேற்று நள்ளிரவு திருவாடனை அருகே சந்தேகத்திற்கு இடமான முறையில் அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்றை சிறப்பு குற்றப்பிரிவு போலீசார் நிறுத்தி விசாரித்தனர். போலீசார் கேட்ட கேள்விகளுக்கு ஆட்டோ ஓட்டுநர் முன்னுக்கு பின் முரணன பதில் அளித்ததால் காவல்துறையினர் ஆட்டோவை சோதனை செய்தனர். அப்போது ஆட்டோவில் மெத்தோக்குலான், பெத்தாமெட்டயின், செம்மரக்கட்டைகள் ,மொபைல் போன்கள், எடை பார்க்கும் இயந்திரம் உள்ளிட்டவற்றை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்த காவல் துறையினர் ஆட்டோ ஓட்டுனரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் “ போதைபொருட்களை நாட்டுப் படகில் இலங்கைக்கு கடத்தி சென்று அங்குள்ள சர்வதேச போதை பொருள் கடத்தல் குழுவினர் மூலம் ஆஸ்திரேலிய நாட்டிற்கு கொண்டு செல்லும் திட்டம் இருந்தது தெரியவந்தது. மேலும் இந்தியாவில் இருந்து போதை பொருட்களை கடத்துவதற்கு மூளையாக செயல்பட்ட சர்வதேச கடத்தல் கும்பல் குறித்த முக்கிய தகவலும் கிடைத்தது. இதன் அடிப்படையில் போதை பொருள் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டு வந்த வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் உட்பட ஒன்பது நபர்களை கைது செய்து போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் கூறுகையில் “பாக்ஜலசந்தி கடல் வழியாக இலங்கைக்கு போதை பொருள்கள் கடத்தப்பட்டு வருவதாக தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் காவல் துறை சார்பாக சிறப்பு படை அமைத்து கடந்த சில மாதங்களாகவே போதை பொருள் கடத்தலில் ஈடுபடும் குற்றவாளிகளை தேடி வந்தோம். தற்போது போதை பொருட்கள் மற்றும் கடத்தல்கார்கள் சிலர் சிக்கியுள்ளனர்,

விரைவில் கடத்தல் கும்பலின் முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள். அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் நடைபெற்று வருகிறது. கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்கள் வெளி மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்டுள்ளது. இவைகளின் சர்வதேச மதிப்பு ஏழு முதல் பத்து கோடி” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com