\
காங்கிரஸ் எம்.எல்.ஏ வீட்டருகே மர்மபொருள் வெடிப்பு: ஒருவர் உயிரிழப்பு

காங்கிரஸ் எம்.எல்.ஏ வீட்டருகே மர்மபொருள் வெடிப்பு: ஒருவர் உயிரிழப்பு

காங்கிரஸ் எம்.எல்.ஏ வீட்டருகே மர்மபொருள் வெடிப்பு: ஒருவர் உயிரிழப்பு
Published on

பெங்களூருவில் காங்கிரஸ் எம்எல்ஏ வீட்டின் அருகே மர்மபொருள் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார்.

பெங்களூருவில் ராஜராஜேஷ்வரி நகரில் காங்கிரஸ் எம்.எல்.ஏ முனிரத்னாவின் வீடு உள்ளது. இவரது வீட்டின் அருகே இன்று காலை மர்மப் பொருள் ஒன்று வெடித்துள்ளது. இந்தச் சம்பவத்தில் வெங்கடேஷ் என்பவர் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அங்கு வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தையடுத்து அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com