இந்தியா
மும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்தது: ஒருவர் பலி, பலர் படுகாயம்
மும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்தது: ஒருவர் பலி, பலர் படுகாயம்
மும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியானார். பலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.
மும்பை அருகே உள்ள பிவண்டி, கே.ஜி நகரில் இன்று காலை 9 மணியளவில் மூன்று மாடி கட்டிடம் ஒன்று திடீரென்று இடிந்து விழுந்தது. இதில் கட்டிடத்தில் இருந்த ஒரு பெண் பலியானார். பலர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து போலீஸ், மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயத்துடன் இடிபாடுகளில் சிக்கிய 5 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலர் அங்கு சிக்கியிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இடிந்து விழுந்த கட்டிடம் ஏழு வருடத்துக்கு முன் கட்டப்பட்டது. இடிந்ததற்காக காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.