இந்தியா
ராணுவ வீரர்களுக்கு 1.85 லட்சம் துப்பாக்கிகள் கொள்முதல்
ராணுவ வீரர்களுக்கு 1.85 லட்சம் துப்பாக்கிகள் கொள்முதல்
ராணுவ வீரர்கள் பயன்படுத்துவதற்காக ஒரு லட்சத்து 85 ஆயிரம் துப்பாக்கிகளை கொள்முதல் செய்யும் பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
எல்லையில் உள்ள வீரர்களுக்கும் பயங்கரவாத தடுப்பு படை வீரர்களுக்கும் அவசரமாக 65 ஆயிரம் துப்பாக்கிகள் உடனடியாக தேவைப்படுவதாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அரசு துப்பாக்கி ஆலையிலிருந்து பெறப்பட்ட துப்பாக்கிகள் தரமற்றவையாக இருந்ததாகவும் எனவே அவை நிராகரிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்