இந்தியா
குஜராத்தில் ரூ.3,500 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
குஜராத்தில் ரூ.3,500 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
குஜராத்தில் ரூ.3,500 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
குஜரதாத்தின் கட்ச் துறைமுக பகுதியில் கப்பலில் கடத்தி வரப்பட்ட 1,500 கிலோ மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருளை கடலோர காவற்படையினர் பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.3,500 கோடி இருக்கும் என்று அதிகாரிகள் கூறினர். கட்ச் கடற்பகுதி வழியாக 1,500 கிலோ ஹெராயின் போதைப்பொருள் கடத்திவரப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலை அடுத்து, கடலோர காவல்படையினர் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, வணிகக் கப்பல் ஒன்றில் கடத்தி வரப்பட்ட 1,500 கிலோ போதைப்பொருளை கடலோர காவல்படையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக சிலரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.