இந்தியா
பண மதிப்பு நீக்கத்தால் 1.5 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர்: ப.சிதம்பரம்
பண மதிப்பு நீக்கத்தால் 1.5 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர்: ப.சிதம்பரம்
பணமதிப்பு நீக்கத்தால் 1.5 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி குற்றம்சாட்டியுள்ளார்.
மத்திய அரசின் பணமதிப்பு நீக்கம் குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையை சுட்டிக்காட்டி பேசியுள்ள ப.சிதம்பரம், பணமதிப்பு நீக்கம் தங்களின் தவறான முடிவு என்பதை மத்திய அரசு தைரியமாக அறிவிக்க வேண்டும் என கூறியுள்ளார். பணமதிப்பு நீக்கம் குறித்த ரிசர்வ் வங்கி தற்போதைய அறிக்கையை தான் 6 மாதத்திற்கு முன்பே கூறிவிட்டதாகவும், பணமதிப்பு நீக்கத்தால் ஒன்றரை லட்சம் பேர் வேலை இழந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஒன்றரை சதவிகிதம் குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.