வெளிமாநிலங்களில் சிக்கியிருக்கும் 1.26 லட்சம் பேர் தமிழகம் திரும்ப விருப்பம்
தமிழகம் திரும்புவதற்காக தமிழக அரசு ஏற்படுத்திய இணையதளத்தில் வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள 1.26 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் இருந்து சென்றுள்ள வெளிமாநில தொழிலாளர்கள், மாணவர்கள், யாத்ரீகர்கள் சொந்த ஊருக்குச் செல்ல பிரத்யேகமான இணையதள பக்கத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸ் பொது முடக்கத்தால் வெளிமாநிலங்களில் ஏராளமான தமிழர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்டு தமிழகம் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, வெளிமாநிலங்களில் இருந்து தாயகம் திரும்ப விரும்புவோர் nonresidenttamil.org என்ற இணையதளப்பக்கத்தில் பதிவு செய்யலாம் என தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகம் திரும்புவதற்காக தமிழக அரசு ஏற்படுத்திய இணையதளத்தில் வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள 1.26 லட்சம் பேர் பதிவுசெய்துள்ளனர். இதேபோல், தமிழகத்தில் இருக்கும் வெளிமாநில தொழிலாளர்கள் 1.18 லட்சம் பேர் தமிழ்நாட்டை விட்டு சொந்த ஊர் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர்.