"நமக்கான அரசியலை ட்விட்டர் நிறுவனம் வரையறுப்பதா?" - விளாசும் ராகுல் காந்தி

"நமக்கான அரசியலை ட்விட்டர் நிறுவனம் வரையறுப்பதா?" - விளாசும் ராகுல் காந்தி
"நமக்கான அரசியலை ட்விட்டர் நிறுவனம் வரையறுப்பதா?" - விளாசும் ராகுல் காந்தி

முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டிருந்த விவகாரத்தில், "ட்விட்டர், எங்களின் அரசியல் செயல்பாடுகளுக்குள் தலையிடுகிறது. இந்திய ஜனநாயகத்தையும், கேள்விக்குறியாக்குகிறது" என தெரிவித்திருக்கிறார் ராகுல்.

இதுதொடர்பாக தனது யூட்யூப் பக்கத்தில் 'ட்விட்டரின் ஆபத்தான விளையாட்டு' என்ற தலைப்பின் கீழ் வீடியோ வெளியிட்டிருக்கும் அவர், அதில் மேலும் சில கருத்துக்களையும் பதிவிட்டுள்ளார். அதன் விவரம்:

"எனது ட்விட்டர் கணக்கை முடக்கியதன் மூலம், அவர்கள் எங்களின் அரசியல் செயல்பாடுகளிலும் சுதந்திரத்திலும் தலையிடுகின்றனர். ஒரு நிறுவனம் இப்படி நமக்கான அரசியலை வரையறுத்து, அதன் மூலம் தனது வணிகத்தை செய்கிறது என்பதை, ஒரு அரசியல்வாதியாக நான் விரும்பவில்லை. இது, இந்தியாவின் ஜனநாயகத்தின்மீது தொடுக்கப்பட்ட வன்முறையாகவே பார்க்கிறேன்.

இந்தியர்களாக நாம் கேட்க வேண்டிய சில கேள்விகள் இருக்கிறது. அவை - நமக்கான அரசியலை, ஆளும் அரசின் சொல்கேட்கும் ஒரு தனியார் நிறுவனம் வரையறுப்பதை நாம் அனுமதிக்கப் போகிறோமா? அல்லது நாமே நமக்கான அரசியலை வரையறுக்கப் போகிறோமா?

ட்விட்டரின் இந்த நடவடிக்கை, ராகுல் காந்தி என்ற தனிப்பட்ட நபரின்மீது செய்யப்பட்ட தாக்குதல் கிடையாது. என்னை ட்விட்டரில் பின்தொடர்ந்த 19 - 20 மில்லியன் மக்கள் மீதானதும் தான். ஏனெனில் அவர்களின் தங்களின் கருத்துகளை என்னுடைய பின்னூட்டத்தில் தெரிவித்திருக்கின்றனர். ஆகவே, அவர்களின் கருத்து சுதந்திரமும் பறிக்கப்படுகிறது. அந்தவகையில் ட்விட்டர் நடவடிக்கை நியாயமற்றது; மேலும், தாங்கள் ஒரு நடுநிலையான தளம் என்ற எண்ணத்திலிருந்தும் ட்விட்டர் நிறுவனம் விலகியிருக்கின்றது. இதுபோன்ற ட்விட்டரின் நடவடிக்கைகள், அதில் முதலீடு செய்பவர்களுக்கு மிகப்பெரிய ஆபத்தாக மாறும் அபாயம்கொண்டது.

முன்னதாக பாராளுமன்றத்தில் எங்களுக்கு பேச்சு சுதந்திரம் மறுக்கப்பட்டது. ஊடகங்களும், கட்டுப்படுத்தப்படுத்தப்பட்டது. ட்விட்டர் போன்ற சமூகவலைதள பக்கத்தில் எங்கள் கருத்துகளை வைக்க, சிறு இடம் இருந்தது. ஆனால் இப்போது அவர்களும் நடுநிலையாக இல்லாமல், அரசு சொல்வதை கேட்போராக இருக்கின்றனர்" எனக் கூறியுள்ளார் ராகுல் காந்தி.

இதுதொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்டிருக்கும் வீடியோ:

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com