\
"உலக அரங்கில் வெளிவேஷம் போடுகிறது பாகிஸ்தான்" - சசி தரூர் சாடல்

"உலக அரங்கில் வெளிவேஷம் போடுகிறது பாகிஸ்தான்" - சசி தரூர் சாடல்

"உலக அரங்கில் வெளிவேஷம் போடுகிறது பாகிஸ்தான்" - சசி தரூர் சாடல்
Published on

எல்லையில் அத்துமீறி வரும் பாகிஸ்தான், சர்வதேச சட்டங்களை முறையாக பின்பற்றி வருவது போல நாடகமாடுகிறது என்று காங்கிரஸ் எம்பி சசி தரூர் குற்றம்சாட்டியுள்ளார்.

செர்பியா நாட்டில் சர்வதேச நாடாளுமன்ற யூனியனின் 141 ஆவது கூட்டத்தில் காங்கிரஸ் எம்பி சசி தரூர், திமுக எம்பி கனிமொழி உள்ளிட்ட இந்திய எம்பிக்கள் பங்கேற்றனர். அங்குள்ள பெல்கிரேட் நகரில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் சசி தரூர் உரையாற்றினார். அப்போது ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத நடவடிக்கைகளை பாகிஸ்தான் ஊக்குவித்து வருவதாக சுட்டிக்காட்டி குற்றம்சாட்டினார். இந்திய எல்லைக்குள் எண்ணற்ற முறை பாகிஸ்தான் படைகள் ஊடுருவியிருப்பதாக சசி தரூர் சாடினார். ஆனால், சர்வதேச சட்டங்களை முறையாக பின்பற்றி வருவது போல பாகிஸ்தான் வெளிவேஷம் போட்டு வருவதாக விமர்சனம் செய்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com