"தடுப்பூசிகள் கையிருப்பு இல்லை" - உ.பி, ஒடிசா, மகாராஷ்டிர மாநில மருத்துவமனைகள் அறிவிப்பு

"தடுப்பூசிகள் கையிருப்பு இல்லை" - உ.பி, ஒடிசா, மகாராஷ்டிர மாநில மருத்துவமனைகள் அறிவிப்பு

"தடுப்பூசிகள் கையிருப்பு இல்லை" - உ.பி, ஒடிசா, மகாராஷ்டிர மாநில மருத்துவமனைகள் அறிவிப்பு
Published on

மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் உத்தரபிரதேச மாநிலத்தின் காசியாபாத் நகரில் உள்ள பல தனியார் மருத்துவமனைகளில் “ தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லை” என அறிவித்திருக்கிறார்கள்.

கோவிட் -19 தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை இல்லை என்று மத்திய அரசு தொடர்ந்து கூறிவருகின்ற நிலையில், காசியாபாத்தில் உள்ள பல தனியார் மருத்துவமனைகள் திங்கள்கிழமை முதல் தடுப்பூசிகள் செலுத்தவில்லை. மேலும் இந்த மருத்துவமனைகளில் அடுத்ததாக தடுப்பூசிகள் எப்போது கிடைக்கும் என்பது குறித்தும் தெளிவு இல்லை, இதுபற்றி இந்த மருத்துவமனைகளின் நுழைவாயிலில் அறிவிப்புகளை ஒட்டியுள்ளனர்.

கோவிட்-19 மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலமான மகாராஷ்டிரா மாநிலத்தின் பல பகுதிகளிலும் தடுப்பூசிகள் தட்டுப்பாடு நிலவுவதாக புகார்கள் வருகிறது. அதுபோலவே ஒடிசா மாநிலத்தின் பல மருத்துவமனைகளிலும் தடுப்பூசி தட்டுபாடு நிலவுவதாக தெரிவித்திருக்கிறார்கள்.

"திங்கள்கிழமை முதல் எங்களிடம் தடுப்பூசி கையிருப்பு இல்லை. அதன்பின்னர் நாங்கள் தடுப்பூசிகள் செலுத்துவதை நிறுத்திவிட்டோம். அடுத்ததாக தடுப்பூசிகள் எப்போது வரும் என்பதில் தெளிவு இல்லை. ஏற்கனவே தடுப்பூசிக்காக பதிவு செய்த நபர்கள், தற்போது எங்களிடம் வந்து வாக்குவாதம் செய்கிறார்கள்" என்று காசியாபாத் லைஃப் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் அலோக் குப்தா தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com